சென்னை ஐஐடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, உத்தரப்பிரதேசத்திலிருந்து தமிழகம் வந்துள்ள மாணவர்களை வரவேற்றார்.
சென்னை ஐஐடியில் தமிழ் கற்கலாம் என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, உத்தரப்பிரதேசத்திலிருந்து தமிழகம் வருகை தந்துள்ள மாணவர்களை வரவேற்றார்.
பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், மொழியால் நமக்குள் இருக்கும் சுவற்றை உடைக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
தொழில்நுட்பங்கள் மூலமாக மொழியைக் கற்றுக் கொள்வது சுலபமாகி வருவதாகக் குறிப்பிட்ட அவர், முடிந்தவரை தமிழில் பேசத் தானும் கற்று வருவதாகக் கூறினார்.
















