இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வின்டர் வொண்டர்லேண்ட் 2025 நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
லண்டனில் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் மற்றும் குளிர்காலத்தை வரவேற்கும் விதமாக வின்டர் வொண்டர்லேண்ட் என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நடப்பாண்டும் வின்டர் வொண்டர்லேண்ட் நிகழ்ச்சி களைகட்டத் தொடங்கியுள்ளது. இதற்காக லண்டனின் ஹைட் பார்க் முழுவதும் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ரோலர்கோஸ்டர்கள், ராட்டிணங்களில் சவாரி சென்று மக்கள் உற்சாகமாகப் பொழுதை கழித்து வருகின்றனர்.
திரும்பும் திசையெல்லாம் கண்ணை பறிக்கும் வண்ண விளக்குகள், இரவை பகலாக மாற்றியுள்ளன. அங்குச் செல்லும் மக்கள் உற்சாகமாக ஆடிப்பாடி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
















