ராகுல் காந்தி, நாட்டின் நலன்கள் மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிரானவர்களை சந்தித்து இந்தியாவுக்கு எதிராகச் சதி செய்வதாக பாஜக செய்தித் தொடர்பாளரும், உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான கவுரவ் பாட்டியா கடுமையாக விமர்சித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின் போது அதில் பங்கேற்காத ராகுல் காந்தி, வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொண்டிருந்தார். இது குறித்து பேசிய கவுரவ் பாட்டியா, ஒரு எதிர்க்கட்சித் தலைவருக்கு நாடாளுமன்றத்தில் பங்கேற்பதை விட ஜெர்மனியில் செய்ய வேண்டிய கடமை என்ன இருக்கிறது என வினவினார்.
மேலும், அங்கு பேராசிரியர் கார்னேலியா வோலை சந்தித்தது குறித்து சந்தேகம் எழுப்பிய அவர், ராகுல்காந்தி இந்தியாவுக்கு எதிரானவர்கள், இந்திய நலன்கள் மற்றும் ஒருமைப்பாட்டை விரும்பாதவர்களையே சந்தித்து உறவாடுவதாக குற்றம்சாட்டினார்.
















