வங்கதேசத்தில் இந்துக்கள் மற்றும் சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் கொடூரத் தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அண்டை நாடான நேபாளத்தில் போராட்டங்கள் வெடித்துள்ளன.
வங்கதேசத்தில் மர்ம நபர்களால் சமீபத்தில் சுடப்பட்ட மாணவர் அமைப்பின் தலைவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாடி, சிகிச்சை பலனின்றி டிசம்பர் 18ம் தேதி உயிரிழந்ததை தொடர்ந்து பயங்கர கலவரம் வெடித்தது. இதை பயன்படுத்தி, இந்து இளைஞரை ஒரு கும்பல் கொடூரமான முறையில் அடித்து கொன்று, அவர் உடலை சாலையில் வைத்து தீவைத்து எரித்தது.
இதனால், வங்கதேசம் கலவர பூமியாக காட்சியளித்து வருகிறது. இந்நிலையில், வங்கதேசத்தில் இந்துக்கள் இலக்கு வைக்கப்பட்டு தாக்கப்படுவதைக் கண்டித்து, நேபாளம் தலைநகர் காத்மண்டுவில் இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, அங்குள்ள வங்கதேச தூதரகத்தை முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்களை, காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் இருதரப்பினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
















