திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசியின் 2ஆம் நாள் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
108 வைணவ தலங்களில் முதன்மையான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அதில் மார்கழி மாதம் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா தனித்துவமிக்கது. பகல்பத்து, ராப்பத்து, இயற்பா என மொத்தம் 21 நாட்கள் இந்த விழா நடைபெறும்.
அந்தவகையில், வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி பகல் பத்து உற்சவம் நேற்று தொடங்கியது.
2ஆம் நாள் நிகழ்வில், நம்பெருமாள் அர்ஜூன மண்டபத்தில் தங்கக் கிளி, முத்து சாய் கொண்டை, வைர அபயஹஸ்தம், பவளமாலை போன்ற சிறப்பு அலங்காரங்களுடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
















