ஆண்டு தோறும் நடத்தப்படும் திருமுறை திருவிழா மக்கள் மனதில் உத்வேகத்தை அளித்து வருகிறது என காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்தார்.
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற திருமுறை திருவிழாவில் சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது இந்த திருவிழா மக்களின் மனதில் நல்ல எண்ணங்களை புகுத்துவதோடு, அனைத்து துறைகளிலும் அனைவரையும் சாதிக்க வைக்க உதவுகிறது என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் நாட்டில் ஆன்மீகம் வளர நல்ல முறையில் குழந்தைகளை வளர்த்தல் அவசியம் என்றும் கூறினார்.
















