ஜனநாயகத்தின் மீதான அசைக்க முடியாத அர்ப்பணிப்பால், வாஜ்பாய் நவீன இந்தியாவை வடிவமைத்தார் என குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்ற அடல் பிஹாரி வாஜ்பாய் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், வாஜ்பாயின் வாழ்க்கை, சேவை, பொறுப்பு மற்றும் மக்களுக்கான அர்ப்பணிப்பைப் பற்றியது என தெரிவித்தார்.
ஜனநாயகத்தின் மீதான அசைக்க முடியாத அர்ப்பணிப்பால், வாஜ்பாய் நவீன இந்தியாவை வடிவமைத்தார் என குறிப்பிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன், வாஜ்பாய் ஒரு அசாதாரணமான மனிதர் என புகழாரம் சூட்டினார்.
















