தியானம் என்பது உள் அமைதி, மனத்தெளிவு மற்றும் உணர்ச்சி நிலைத்தன்மைக்கு வழிவகுக்கும் ஒரு பாதையாகும் என குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்தியா உள்ளிட்ட நாடுகளின் கோரிக்கைகளை ஏற்று, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 21-ம் தேதி சர்வதேச தியான தினமாக அனுசரிக்கப்படும் என, கடந்த 2024-ல் ஐநா சபை அறிவித்தது. அதன்படி 2-வது முறையாக உலகம் முழுவதும் சர்வதேச தியான தினம் அனுசரிக்கப்பட்டது.
அந்த வகையில் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெற்ற சர்வதேச தியான நிகழ்சியினை குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய சி.பி.ராதாகிருஷ்ணன், தியானம் என்பது கலாச்சார, புவியியல் மற்றும் மத எல்லைகளைத் தாண்டிய ஒரு உலகளாவிய பயிற்சியாகும் என கூறினார். மேலும், இந்தியாவில் தியானம் என்பது யுகம் யுகங்களாக வருங்கால சந்ததியிடம் கடத்தப்படுகிறது எனவும் அவர் தெரிவித்தார்.
















