பிரிவினைகளைக் கடந்து ஒருமைப்பாட்டை நோக்கிச் செல்வதே உண்மையான சுதந்திரம் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி அடுத்த ஆரோவில்லில் கடந்த 15-ம் தேதி தொடங்கிய இலக்கிய விழா நிறைவடைந்தது. இதில், மத்திய அமைச்சர்கள், தொழிலதிபர்கள், எழுத்தாளர்கள் என பலர் கலந்துகொண்டனர். விழாவுக்கு வருகைதந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை, ஆரோவில் அறக்கட்டளை செயலாளரும், குஜராத் கூடுதல் தலைமை செயலருமான ஜெயந்தி ரவி வரவேற்றார்.
பின்னர் விழாவில் பேசிய அவர், இந்தியா என்பது வெறும் நிலப்பரப்பு மட்டுமல்லாமல், வேத தத்துவத்தில் வேரூன்றிய “பாரத சக்தி” என தெரிவித்தார். வாழ்வாதாரத்தை தக்கவைக்கும் நிலையில் இருந்து, மறுமலர்ச்சி நிலைக்கு பாரதம் முன்னேறி உள்ளதாக குறிப்பிட்ட அவர், பிரிவினைகளைக் கடந்து ஒருமைப்பாட்டை நோக்கிச் செல்வதே உண்மையான சுதந்திரம் என கூறினார்.
















