திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் பூர்ணசந்திரன் தீக்குளித்து உயிரிழந்ததற்கு திமுக அரசும், முதலமைச்சர் ஸ்டாலினும் தான் காரணம் என முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் குற்றம் சாட்டியுள்ளார்.
மதுரையில் பூர்ண சந்திரன் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக-வினர் மனிதாபிமான அடிப்படையில் கூட ஆறுதல் தெரிவிக்கவில்லை என தெரிவித்தார்.
பூர்ண சந்திரன் குடும்பத்துக்கு அனைவரும் நிதி வழங்க முன்வர வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
திமுக, அதிமுக என காவல் அதிகாரிகள் பிரிந்து கிடக்கின்றனர் என்றும், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொள்வேன் என்றும் பொன். மாணிக்கவேல் தெரிவித்தார்.
















