திருப்பரங்குன்றத்தில் கைது செய்தவர்களை விடுவிக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் பாஜகவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதி அளிக்காத தமிழக அரசு சிக்கந்தர் தர்காவில் கொடியேற்றுவதற்கு அனுமதி வழங்கியது. அரசின் இந்த செயலை கண்டித்த அப்பகுதி மக்கள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையறிந்த காவல்துறையினர் குழந்தைகள், பெண்கள் உட்பட ஏராளமானோரை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர். இவர்களை விடுவிக்கக் கோரியும், காவல்துறையை கண்டித்தும் பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அனைவரையும் வலுக்கட்டாயமாக கைது செய்ததோடு பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
















