குளித்தலை அருகே அரசு நடுநிலைப்பள்ளியில் சமையல் வேலை செய்த பட்டியலினத்தைச் சேர்ந்த பெண் பணி நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள சின்ன ரெட்டியப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில், முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் நிரோஷா என்பவர் கடந்த 4 மாதங்களாகப் பணியாற்றி வந்துள்ளார்.
பட்டியலினத்தைச் சேர்ந்த பெண் சமைத்தால் தங்களது பிள்ளைகள் சாப்பிட மாட்டார்கள் என்றும், பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பமாட்டோம் எனவும் பெற்றோர் கூறியதாகக் கடந்த 6ஆம் தேதி தோகைமலை வட்டார வளர்ச்சி மகளிர் திட்ட இயக்குநரும், பள்ளி தலைமை ஆசிரியையும் நிரோஷாவை பணி நீக்கம் செய்துள்ளனர்.
இது தொடர்பாகக் கரூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் தோகைமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக நிரோஷா தெரிவித்துள்ளார்.
















