சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனாவுக்கு ராஜஸ்தான் ஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
சென்னை சேத்துப்பட்டு பகுதியில் உள்ள லேடி ஆண்டாள் ஆடிட்டோரியத்தில் ராஜஸ்தானி சங்கம் தமிழ்நாடு சார்பில் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
16வது ஆண்டு விருது வழங்கும் விழாவில், சிறப்பு விருந்தினராக ஜார்கண்ட் உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கற்பக விநாயகம், கௌரவ விருந்தினராகத் தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில், கின்னஸ் சாதனை படைத்த ‘Miracle on Wheels’ குழுவின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனை தொடர்ந்து பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த ராஜஸ்தானியர்களுக்கு, ராஜஸ்தான் ரத்னா, ராஜஸ்தான் ஶ்ரீ விருதுகள் வழங்கப்பட்டன.
















