அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் குறித்த தேர்தல் வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே விசிக பொதுச்செயலாளர் வன்னிஅரசு தாயாரின் படத்திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், விசிக தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு புஷ்பம் ரத்தினசாமியின் படத்தைத் திறந்து வைத்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோர் பணி நிரந்தரம் கோரி போராடி வருவதை சுட்டிக் காட்டினார்.
அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்தில் குறைபாடு உள்ளது என்றும், தேர்தல் நெருங்கும் நேரத்தில் இதனை சரிசெய்ய முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
















