உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூரில் ஆன்லைனில் பிறந்தநாளுக்காக ஆர்டர் செய்யப்பட்ட கேக்கில் ஐஸ் கட்டி வைத்து அனுப்பப்பட்ட சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
பெண் ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக ஆன்லைனில் கேக் ஆர்டர் செய்யப்பட்டது.
அது ஐஸ் கேக் என்பதால் உருகிவிட கூடாது என்பதற்காக ஐஸ் கட்டி வைத்து அனுப்பப்பட்டிருந்தது.
இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் பலரும் பலவிதமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
















