பல்கேரியாவில் நூற்றுக்கணக்கானோர் சாண்டாகிளாஸ் வேடமணிந்து இருசக்கர வாகனத்தில் பேரணி சென்றனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் வரும் 25ஆம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது.
இதனை முன்னிட்டு, குடில்கள், கிறிஸ்துமஸ் மரங்கள் அமைப்பது, சான்டா கிளாஸ் வேடமணிவது, கேக் தயாரிப்பது எனப் பல்வேறு கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், பல்கேரியா நாட்டின் தலைநகரான சோஃபியாவில் நூற்றுக்கணக்கானோர் சாண்டாகிளாஸ் வேடமணிந்து இருசக்கர வாகனத்தில் பேரணி சென்றனர்.
















