வாக்கு வங்கியில் ஊடுருவல்காரர்களை நம்பியிருப்பதால் மட்டுமே, எஸ்ஐஆர் பணிகளை காங்கிரஸ் எதிர்ப்பதாகப் பிரதமர் மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.
2 நாட்கள் பயணமாக அசாம் சென்ற பிரதமர் மோடி, நம்ரூப்பில் அம்மோனியா-யூரியா திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
பின்னர் விழா மேடையில் பேசிய அவர், பாஜக ஆட்சிக்குப் பிறகே, விவசாயிகள் நலனுக்காகப் பல திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாகத் தெரிவித்தார்.
காங்கிரஸ் ஆட்சியின்போது இழைக்கப்பட்ட தவறுகளையும், பாஜக சரிசெய்து வருவதாகக் கூறிய அவர், வாக்கு வங்கியில் ஊடுருவல்காரர்களை நம்பியிருப்பதால் மட்டுமே, எஸ்ஐஆர் பணிகளை காங்கிரஸ் எதிர்ப்பதாக விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தேச விரோத சித்தாந்தங்களை காங்கிரஸ் ஊக்குவிப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.
முன்னதாக, கவுஹாத்தியில் உள்ள போராட்ட தியாகிகளின் நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.
நினைவிடத்தில் உள்ள அணையா விளக்கின் முன் மலர் தூவி அஞ்சலி செலுத்திய அவர், தியாகிகளின் மார்பளவு சிலைகள் வைக்கப்பட்டுள்ள காட்சிக்கூடத்தை பார்வையிட்டார்.
















