தனது விண்வெளி பயணத்திற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றியுடையவராக இருப்பேன் என மிக்கேலா பெந்தாஸ் தெரிவித்துள்ளார்.
ஜெர்மனியைச் சேர்ந்த மிக்கேலா பெந்தாஸ், தனது 12 வயதில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக, அவரது முதுகெலும்பில் ஏற்பட்ட பாதிப்பால் சக்கர நாற்காலியைப் பயன்படுத்தத் தொடங்கினார்.
இவர் ஜெஃப் பெசோஸின் ப்ளூ ஆர்ஜின் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட நியூ ஷெப்பர்ட் 28 எனும் பயணத்தில், விண்வெளிக்கு சென்று திரும்பிச் சாதனை படைத்துள்ளார்.
















