வெனிசுலாவுக்கு சொந்தமான 3-வது எண்ணெய் கப்பலையும் அமெரிக்கா பறிமுதல் செய்தது.
வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்கு போதை பொருட்கள் கடத்தப்படுவதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார்.
இதனையடுத்து வெனிசுலாவை சுற்றி கடலில் அமெரிக்கா தனது படைகளைக் குவித்து உள்ளது. அந்நாட்டுக்கு சொந்தமான எண்ணெய் கப்பல்களையும் அமெரிக்கா தொடர்ந்து பறிமுதல் செய்து வருகிறது.
இந்நிலையில் வெனிசுலாவுக்கு அருகிலுள்ள சர்வதேச கடல் பகுதியில் அமெரிக்க கடலோரக் காவல்படையால் 3-வதாக ஒரு எண்ணெய் கப்பல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
















