‘பகவத்கீதையை ஒரு குறிப்பிட்ட மதத்திற்குள் அடக்கிவிட முடியாது எனவும், அது ஒரு நீதிநெறி புத்தகம்’ என்றும் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தெரிவித்துள்ளது.
ஆர்ஷ வித்யா பரம்பரா அறக்கட்டளை நிர்வாகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ‘வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை சட்டப்படி பதிவு செய்ய, மத்திய உள்துறை அமைச்சகத்திட அளித்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகவும், அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென்வும் குறிப்பிடப்பட்டிருந்தது.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் அறக்கட்டளை, மத ரீதியானது என்பதால், வெளிநாட்டு நன்கொடைகளை பெறுவதற்கு முன்பு மத்திய அரசிடம் பதிவுச்சான்று பெற வேண்டுமென மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மனுதாரரின் அமைப்பு பகவத்கீதையில் உள்ள கருத்துக்களை பரப்புவதில் ஈடுபட்டுள்ளதால், அது ஒரு மத அமைப்பு என்ற முடிவிற்கு வந்துவிட முடியாது எனக் குறிப்பிட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ‘பகவத்கீதையை ஒரு குறிப்பிட்ட மதத்திற்குள் அடக்கிவிட முடியாது.
அது ஒரு நீதிநெறி புத்தகம்’ எனத் தெரிவித்தார். இதையடுத்து, மனுவை நிராகரித்த உத்தரவை ரத்து செய்த நீதிபதி, மனுதாரரின் விளக்கத்தைப் பெற்று புது உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென ஆணை பிறப்பித்தார்.
















