நீதிமன்ற உத்தரவுப்படி, திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்றக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.
நீதிமன்ற தீர்ப்பைச் செயல்படுத்தாத தமிழக அரசை கண்டித்து மதுரை மாவட்ட இந்து முண்ணனி சார்பில், மதுரை பெத்தானியாபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்து முன்னணி மாநில செயலாளர் சேவுகன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தகவலறிந்த போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்தனர். தீபத்தூணில் தீபம் ஏற்றும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்றும் இந்து முன்னணியினர் தெரிவித்தனர்.
















