நெல்லையில் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்த பொருநை அருங்காட்சியகம் அருகிலேயே மாநகராட்சி, குப்பைகளைக் கொட்டி வருவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
திருநெல்வேலி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை முறையாக அப்புறப்படுத்தாமல், முதலமைச்சர் திறந்து வைத்த பொருநை அருங்காட்சியகத்தின் அருகில் கொட்டப்படுகின்றன.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், குப்பைகளுடன் வந்த வாகனத்தைச் சிறைபிடித்தனர். குப்பைகளை கொட்டிய ஊழியர்கள், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
















