தருமபுரி அருகே போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிரியர், சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நல்லம்பள்ளி அருகே அரசு உயர்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவிக்குக் கடந்த மாதம் 27 ஆம், ஆசிரியர் மணிவண்ணன் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து கடந்த 15ம் தேதி தலைமை ஆசிரியர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஆசிரியர் மணிவண்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் சிறையில் இருந்த மணிவண்ணன் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனையடுத்து, இறந்தவரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காகத் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் போலீசார் அனுப்பி வைத்தனர்.
அதனைத்தொடர்ந்து, இறப்பில் மர்மம் இருப்பதாகக் கூறி ஆசிரியர் மணிவண்ணனின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
















