சத்தீஸ்கரை சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர் உடல் முழுவதும் கல்லாக மாறும் அரிய வகை நோயால் அவதிப்பட்டு வருகிறார்.
தண்டேவாடா மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமியான ராஜேஸ்வரி என்பவர் கடந்த சில ஆண்டுகளாக அரிய தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு 4 வயதாக இருந்தபோது தோல் நோயின் அறிகுறிகள் தோன்றியுள்ளன. முதலில் உடலில் செதில்கள் உருவாகி, பின்னர் அது படிப்படியாக மரப்பட்டை போலக் கடினமாகி கல்லைப் போல மாறியுள்ளன.
சிறுமிக்கு இக்தியோசிஸ் ஹிஸ்ட்ரிக்ஸ் என்ற மரபணு தோல் நோய் இருப்பதாக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.
உலகளவில் ஒரு சிலர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ள இந்த நோய்க்கு நிரந்தர சிகிச்சை என எதுவும் இல்லாததால், சிறுமி நாளுக்கு நாள் மன அழுத்தத்துக்கு ஆளாகி வருகிறார்.
















