அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் கடலுக்கு அடியில் கிறிஸ்துமஸ் கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் வரும் 25ஆம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது.
இதனை முன்னிட்டு, குடில்கள், கிறிஸ்துமஸ் மரங்கள் அமைப்பது, சான்டா கிளாஸ் வேடமணிவது, கேக் தயாரிப்பது எனப் பல்வேறு கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள ஃபுளோரிடா கீஸ் கடல் பகுதியில், ‘கேப்டன் ஸ்லேட்ஸ் ஸ்கூபா அட்வென்ச்சர்ஸ்’ நிறுவனத்தின் உரிமையாளர் சாண்டா கிளாஸ் வேடமணிந்து கடலுக்குள் இறங்கினார்.
தொடர்ந்து அவரது உதவியாளர்கள், குள்ளர்கள் மற்றும் கடல்கன்னி வேடமணிந்து வண்ணமயமான மீன்களுக்கு நடுவே நீந்திக் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினர்.
கடல் பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தி, இவர்கள் கடந்த 35 ஆண்டுகளாகக் கொண்டாடி வரும் நிகழ்வை பலரும் பாராட்டி வருகின்றனர்.
















