மதுரை உசிலம்பட்டி நகர பகுதியில், சாலை விரிவாக்கப் பணிக்காகக் கடைகளுக்கு முன்பு இருந்த ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றினர்.
பேரையூர் ரோடு, வத்தலக்குண்டு ரோடு பகுதியில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதற்காகக் கடைகள், வணிக வளாகங்களுக்கு முன்பு இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்த நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளின் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகளை, போலீஸ் பாதுகாப்புடன் நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றினர்.
















