தருமபுரி மாவட்டம் பழைய இண்டூர் அருகே கோயில் நிலத்தை ஆக்கிரமித்த தவெக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
கோணக்குளம் பகுதியில் மண்டுமாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமான 4 ஏக்கர் நிலம் அமைந்துள்ளது.
இந்த நிலத்தைத் தவெக மாவட்ட செயலாளர் தாபா சிவா என்பவர் போலி ஆவணங்கள் மூலம் ஆக்கிரமித்துள்ளதாகவும், நிலத்தில் அமைந்துள்ள கனிம வளங்களைக் கொள்ளையடிப்பதாகவும் கிராமத்தினர் குற்றம்சாட்டினர். மேலும் நிலத்தின் அருகே முற்றுகையிட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்
















