கோவையில் பட்டா எண்ணில் உள்ள பிழையை திருத்தம் செய்ய மாவட்ட நிர்வாகம் மறுப்பதாகக் கூறி மூத்த தம்பதியினர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது, இதில் மனு அளிக்க வந்த வெங்கடாசலம்- நாகமணி தம்பதியர் திடீரென மண்னெண்ணெயை தலையில் ஊற்றித் தீக்குளிக்க முயன்றனர்.
இதைக்கண்ட காவல்துறையினர் தண்ணீரை ஊற்றி இருவரையும் காப்பாற்றி விசாரணை மேற்கொண்டனர். அதில் வெங்கடாசலத்திற்கு சொந்தமான பட்டாவில் பிழை இருப்பதாகவும் இதனைத் திருத்தம் செய்ய மாவட்ட நிர்வாகம் மறுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் சிலர் தங்களது நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சிப்பதாகவும் தம்பதி வேதனை தெரிவித்தனர்.
















