வங்கதேசத்தில் நிலவி வரும் வன்முறையில் இந்துக்கள் மீதான தாக்குதல் சம்பவம்குறித்து ஐநா கவலை தெரிவித்துள்ளது.
சமீபத்தில் வங்கதேசத்தில் மாணவர் இயக்கத்தின் தலைவரான ஷெரீப் ஓஸ்மான் ஹாதி என்பவர் சிலரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இதனை தொடர்ந்து அங்கு வெடித்த வன்முறையில், இந்து இளைஞரான தீபு சந்திர தாஸ் என்பவர் உயிருடன் தீ வைத்து எரிக்கப்பட்டார். இந்நிலையில் வங்கதேச வன்முறை குறித்து ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கவலை தெரிவித்துள்ளார்.
அவர், வங்கதேசத்தில் கண்ட வன்முறைகுறித்து தாங்கள் மிகவும் கவலை கொள்கிறோம் எனத் தெரிவித்தார். மேலும், வங்கதேசத்தில் அனைத்து மக்களும் பாதுகாப்பாக இருக்கும் சூழலை உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
















