திருச்சியில் 1.22 சென்ட் நிலத்தைத் திமுக கவுன்சிலர் அபகரித்துள்ளதாக பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
ஓலையூர் பகுதியில் இர்பான் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில் அவரது நிலத்தை திமுக கவுன்சிலர் காஜாமலை விஜய் ஆக்கிரமித்துள்ளதாகவும், தட்டிக்கேட்டால் மிரட்டுவதாகவும் இர்பான் குற்றம் சாட்டினார்.
இதுதொடர்பாக நீதிமன்றம் உத்தரவிட்டும் தனது நிலத்தை மீட்டுதர காவல்துறை மறுப்பதாகவும் அவர் புகார் தெரிவித்தார்.
















