தென்கொரியாவில் வணிக நோக்கத்துக்காக விண்ணில் பாய்ந்த ராக்கெட், ஏவப்பட்ட ஒரு நிமிடத்திலேயே வெடித்து சிதறியது.
தென் கொரிய ஸ்டார்ட்அப் நிறுவனமான இன்னோஸ்பேஸுக்கு சொந்தமான ஹான்பிட்-நானோ ராக்கெட், பிரேசிலில் உள்ள அல்காண்டரா விண்வெளி மையத்திலிருந்து விண்ணில் ஏவப்பட்டது.
இது காலநிலை கண்காணிப்புக்காக மொத்தம் 5 செயற்கைக் கோள்களை சுமந்து சென்றது. இந்நிலையில் ஹான்பிட்-நானோ ராக்கெட் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் பூமியிலேயே விழுந்து சுக்கு நூறாக வெடித்து சிதறியது.
இதனால் தென் கொரிய தனியார் நிறுவனத்தின் முதல் சுற்றுப்பாதை ஏவுதல் முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.
















