ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி ஆரன்முளா பார்த்த சாரதி கோயிலில் இருந்து ஊர்வலமாகச் சபரிமலைக்கு புறப்படுகிறது.
சபரிமலையில் வரும் 27ம் தேதி பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு ஐயப்ப விக்ரகத்தில் தங்க அங்கி அணிவிக்கப்படுவது வழக்கம்.
அந்தவகையில், இந்த ஆண்டு மண்டல பூஜையை முன்னிட்டு ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் வைக்கப்பட்டுள்ள தங்க அங்கி ஊர்வலமாகச் சபரிமலைக்கு புறப்படுகிறது.
26-ம் தேதி மாலை ஊர்வலம் சன்னிதானத்தை வந்தடையும். அன்று மாலை ஐயப்ப விக்ரகத்தில் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும்.
மறுநாள் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நடத்தப்பட்டு இரவு சபரிமலை கோயில் நடை சாத்தப்படும் நிலையில், மண்டல சீசன் நிறைவடைகிறது.
















