தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ஒப்பந்த செவிலியர்கள் 6வது நாளாகக் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மருத்துவ தேர்வு வாரியத்தால் தேர்வான, ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்ட செவிலியர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தேனி அரசு மருத்துவமனையின் வளாகத்தில் 100க்கும் மேற்பட்ட செவிலியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், சென்னையில் செவிலியர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். மேலும், கோரிக்கைகளை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் எனச் செவிலியர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
















