உலகின் மிகப்பெரிய அணுமின் நிலையமான காஷிவாஸாகி – கரிவா அணுமின் நிலையத்தை மீண்டும் இயக்க ஜப்பான் முடிவு செய்துள்ளது.
ஜப்பானின் நிகாட்டா மாகாணத்தில் உள்ள காஷிவாஸாகி – கரிவா அணுமின் நிலையம் 8,212 மெகா வாட் உற்பத்தி திறன் கொண்ட உலகின் மிகப்பெரிய அணுமின் நிலையமாகும்.
இது கடந்த 2012-ல் பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டது. இந்நிலையில் இந்த அணு மின் நிலையத்தை மீண்டும் இயக்குவது தொடர்பான தீர்மானத்துக்கு, நிகாட்டா மாகாண சட்டசபை ஒப்புதல் அளித்துள்ளது.
முதற்கட்டமாக அணுமின் நிலையத்தின் 6வது அணு உலை, அடுத்தாண்டு ஜனவரி 20ம் தேதி முதல் மீண்டும் இயக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
















