வங்கதேசத்தில் இந்துக்களின் வீடுகளுக்கு தீவைத்த கிளர்ச்சியாளர்கள், இந்துக்களை யாராலும் காப்பாற்ற முடியாது என பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளனர்.
வங்கதேசத்தில் கடந்த வாரம் இன்குலாப் மஞ்ச் என்ற மாணவர் அமைப்பின் செய்தி தொடர்பாளர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து அந்நாட்டில் வன்முறை வெடித்தது.
இதன் தொடர்ச்சியாக, இந்து இளைஞர் கொடூரமாக தாக்கி கொல்லப்பட்ட நிலையில், மாணவர் அமைப்பின் மற்றொரு தலைவரான முகமது மொதாலெப் சிக்தார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
மாணவர் அமைப்பின் தலைவர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சிட்டகாங் பகுதியில் உள்ள இந்துக்களின் வீடுகளை கிளர்ச்சியாளர்கள் தீவைத்து எரித்துள்ளனர்.
மேலும், இந்துக்களை மிரட்டும் வகையில் ஒரு பதாகை கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதில், இஸ்லாமியர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்துக்கள் நிறுத்தாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று தெரிவித்துள்ளனர். மேலும், இந்துக்களை யாராலும் காப்பாற்ற முடியாது என எழுதி வைத்து சென்றுள்ளனர்.
















