துருக்கியில் நடந்த விமான விபத்தில் லிபியா ராணுவத் தலைவர் முகமது அலி அகமது அல் ஹதாத் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.
துருக்கியின் தலைநகரான அங்காராவிலிருந்து, லிபிய ராணுவத் தலைவர் முகமது அலி அகமது அல் ஹதாத் உட்பட 7 பேர் தனியார் ஜெட் விமானத்தில் பயணித்தனர்.
அப்போது புறப்பட்ட 40 நிமிடங்களிலேயே விமானம் தொடர்பை இழந்தது. பின்னர் அவசரமாக விமானத்தை தரையிறக்க முயற்சித்த போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
இதில் விமானத்தில் பயணித்த லிபிய ராணுவத் தலைவர் முகமது அலி அகமது அல் ஹதாத் உட்பட 7 பேரும் உயிரிழந்தனர். விமான விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
















