சிதம்பரத்தில் உள்ள உலக புகழ்பெற்ற நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி ஆருத்ரா தரிசனம், ஆனித் திருமஞ்சன தரிசனம் ஆகிய இரு விழாக்கள் தொன்று தொட்டு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான ஆருத்ரா தரிசனம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இதனைதொடர்ந்து நாளை வெள்ளி சந்திர பிரபை வாகன வீதியுலா நடைபெறவுள்ளது. புத்தாண்டு தினமான ஜனவரி 1-ஆம் தேதி தங்க ரதத்தில் சோமாஸ்கந்தர் வெட்டுக்குதிரை வாகனத்தில் வீதியுலா நடைபெறுகிறது. தேர் திருவிழா ஜனவரி 2ஆம் தேதியும், 3ஆம் தேதி ஆருத்ரா தரிசனமும் நடைபெறுகிறது. 4ஆம் தேதி பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கு வீதியுலாவும், 5ஆம் தேதி ஞானப்பிரகாசம் குளத்தில் தெப்ப உற்சவமும் நடைபெறவுள்ளது.
















