சேலம் – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதிய விபத்தில் லாரி ஓட்டுநர் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவில் இருந்து மதுரை நோக்கி புறப்பட்ட லாரியில் டீசல் காலியானதால் பெங்களூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மாமாங்கம் பகுதியில் லாரியை நிறுத்திவிட்டு ஓட்டுநர், டீசலை நிரப்பும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது, அதிவேகமாக வந்த உதய கிருஷ்ணா நிறுவனத்தின் வாகனம், சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியின் பின்னால் மோதியுள்ளது. இதனை தொடர்ந்து, சபரிமலையில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற பக்தர்களின் வாகனம் உதய கிருஷ்ணா நிறுவனத்தின் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
அடுத்தடுத்து வாகனங்கள் மோதியதால் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியின் டீசல் டேங்க் திறந்திருந்ததால் பக்தர்கள் வந்த வேன் தீப்பற்றி எரிந்துள்ளது. உடனடியாக பக்தர்கள் இறங்கிய நிலையில், உதய கிருஷ்ணா நிறுவன வாகனத்தில் வந்த லாரி ஓட்டுநர் தீயில் சிக்கி உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் வீசியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
















