சென்னை பட்டினப்பாக்கத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற சுனாமி நினைவேந்தல் நிகழ்ச்சியில் குஷ்பு உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி ஏற்பட்ட சுனாமியில் லட்சக் கணக்கானோர் உயிரிழந்தனர்.
இதன் 21 ஆவது நினைவு தினத்தையொட்டி, சென்னை பட்டினப்பாக்கத்தில் பாஜக சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பாஜக மாநில துணை தலைவர் குஷ்பு, பாஜக மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் உள்ளிட்டர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அவர்கள் கடலில் மலர்தூவி உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தினர்.
















