சீனாவில் கொடூரமான ஒரு குழந்தை கொள்கையை அமல்படுத்திய பெங் பெய்யுன் மரணம், அந்நாடு முழுவதும் வெறுப்புக்கு ஆளாகியுள்ளது.
1980 முதல் 2015 வரை சீனாவின் குடும்பக் கட்டுப்பாட்டு கொள்கையைத் தீவிரமாக அமல்படுத்தி வந்த பெங் பெய்யுன், கடந்த டிசம்பர் 21ம் தேதி பெய்ஜிங்கில் மரணமடைந்தார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சி அவரை மக்கள்தொகை கொள்கை, பெண்கள் மற்றும் குழந்தைகள் பிரச்சினைகளில் சிறந்த தலைவர் என்று அழைத்தது.
ஆனால் உண்மையில், அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்தவர்ளை விட, விமர்சனக் கணைகளை தொடுத்தவர்கள்தான் சீனாவில் அதிகம். உலகத்தரம் வாய்ந்த அசுரன், கொடூரமான பெண், தீயவள் என்றெல்லாம் சமூக வலைதளங்களில் பெய்யுனை பற்றிய துர்வாசகங்கள் நிறைந்திருந்தன.
கோடிக்கணக்கான கட்டாய கருக்கலைப்புகளுக்கு காரணமான பெங் பெய்யுனை நரகம் கூட மன்னிக்காது என்று கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தியிருந்தனர்.
1980 ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட ஒரு குழந்தை கொள்கையால், 2015 ஆம் ஆண்டு சீனாவின் மக்கள் தொகை குறைந்து, வயதானவர்களின் எண்ணிக்கை ஆபத்தான விகிதத்தில் அதிகரித்ததால் திரும்பப் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
















