ஓசூரில் விவசாயத்துக்கு எந்தப் பாதிப்பும் இல்லாமல் விமான நிலையம் வேண்டும் எனத் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் தொழிலதிபர்கள், விவசாயிகள் வலியுறுத்தினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள தனியார் ஹோட்டலில் விவசாயிகள் மற்றும் தொழிலதிபர்கள் கலந்துரையாடல் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டு இருதரப்பினரிடமும் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், ஓசூரில் சிறப்பான முறையில் தொழில் வளர்ச்சி நடைபெற்று வருகிறது என்றும், ஓசூரில் உள்ள தொழிற்சாலைகளில் பல ஆயிரம் இளைஞர்கள் பணியாற்றி வருவதாகவும் கூறினார்.
2026ல் ஆட்சி மாற்றம் ஏற்படும்போது மின் கட்டண கொள்ளை தடுக்கப்படும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
















