நெல்லை நெல்லையப்பர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.
நெல்லை நெல்லையப்பர் கோயிலில் ஆருத்ரா தரிசனப் பெருவிழா ஆண்டுதோறும் பத்து நாட்கள் நடைபெறும்.
அந்தவகையில், இந்த ஆண்டுக்கான ஆருத்ரா தரிசன விழாவிற்கான கொடியேற்றம் நடைபெற்றது.
முன்னதாக, அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு, சுவாமி நெல்லையப்பர் மற்றும் காந்திமதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் செய்யப்பட்டது.
தொடர்ந்து, கொடிமரத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க, கொடியேற்றம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
















