ஈரோடு மாவட்டம், நம்பியூர் அருகே தேசிய அளவில் தங்கப்பதக்கம் வென்று திரும்பிய மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கடந்த டிசம்பர் 16-ம் தேதி முதல் 21-ம் தேதி வரையிலும், ராஜஸ்தானில் தேசிய அளவிலான கைப்பந்து போட்டிகள் நடைபெற்றன. இதில் தமிழகத்தின் சார்பில் களமிறங்கிய அணியில், 12-ம் வகுப்பு மாணவியான ரித்திகா மற்றும் முகமது ரெபி ஆகியோரும் பங்கேற்றனர்.
இந்தப் போட்டியில் தமிழக அணி சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்று, தங்கப் பதக்கத்தை வென்றது.
இந்நிலையில் வெற்றி பெற்று ஊர் திரும்பிய மாணவர்களுக்கு நம்பியூர் பொதுமக்கள் சிறப்பான வரவேற்பளித்தனர்.
மேலும், அவர்களை ஊர்வலமாக அழைத்து வந்து சால்வை அணிவித்து பாராட்டு கேடயமும் வழங்கினர்.
















