திருப்பூர் மாவட்டம், பொங்கலுார் அருகே இந்து அன்னையர் முன்னணியின் சார்பில் வேல் வழிபாடு நடத்தப்பட்டது.
கண்டியன்கோவில் பகுதியில் உள்ள அலகுமலை வித்யாலயா பள்ளி வளாகத்தில் இந்து அன்னையர் முன்னணி சார்பில் வேல் வழிபாடு நடத்தப்பட்டது.
அப்போது வேலுக்கு சிறப்புப் பூஜைகள் மற்றும் அபிஷேகம், மஹா தீபாராதனை நடைபெற்றது.
இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்த வழிபாட்டில் கந்த சஷ்டி கவசம் பாராயணம், திருமந்திரம், வில்லுப்பாட்டு உள்ளிட்டவை நடத்தப்பட்டது.
வேல் வழிபாட்டில் பங்கேற்ற பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் கந்த சஷ்டி கவசம் பாடினால் வீரம் பிறக்கும் என்று தெரிவித்தார்.
















