ரஷ்யா – சீனா கூட்டுத் திட்டத்தில் விண்வெளியில் அணு மின் நிலையம் அமைக்கப்படவுள்ளது.
உலகில் உள்ள வல்லரசு நாடுகளுக்கிடையேயான போட்டி இன்று புவியியல் அரசியல் எல்லைகளைத் தாண்டி, விண்வெளி துறையிலும் தீவிரமடைந்துள்ளது.
குறிப்பாக நிலவை மையமாகக் கொண்ட ஆராய்ச்சிகளில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இந்தியா போன்ற நாடுகள் கடும் போட்டியில் ஈடுபட்டு வருகின்றன.
அதிலும் குறிப்பாக 1961ஆம் ஆண்டு, சோவியத் விண்வெளி வீரர் யூரி ககாரின் விண்வெளிக்கு சென்ற முதல் மனிதராக வரலாறு படைத்தார்.
அதன்பின் பல ஆண்டுகள், விண்வெளி ஆராய்ச்சியில் ரஷ்யா முன்னணி சக்தியாக இருந்தது.
ஆனால் கடந்த சில தசாப்தங்களில், அமெரிக்கா மற்றும் சீனாவுடன் ஒப்பிடுகையில் ரஷ்யா பின்னடைவை சந்தித்துள்ளது.
இந்தப் பின்னணியில், ரஷ்யாவின் விண்வெளி முகமையான ராஸ்காஸ்மோஸ், 2036ஆம் ஆண்டுக்குள் நிலவில் அணுமின் நிலையம் அமைக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.
இதற்காக லேவோடன் அசோசியேஷன் என்ற விண்வெளி நிறுவனத்துடன் ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது.
இந்த அணுமின் நிலையம், ரஷ்யா மற்றும் சீனா இணைந்து உருவாக்கி வரும் சர்வதேச நிலா ஆராய்ச்சி நிலையம் தேவையான மின்சாரத்தை வழங்கவுள்ளது.
















