சீனாவில் புதிய செயற்கை நுண்ணறிவு ரோபோ ஒன்று கையால் துணியைத் தைக்கும் காட்சி வைரலாகி வருகிறது.
சீனா, ரோபோட்டிக் தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ளது. குறிப்பாகத் தனது உற்பத்தித் துறையில் 20 லட்சத்திற்கும் அதிகமான தொழிற்சாலை ரோபோக்களை பயன்படுத்தத் தொடங்கியதன் மூலம் உலகளவில் தொழிற்சாலை ரோபோக்கள் பிரிவில் ஆதிக்கம் செலுத்துகிறது.
இந்த எண்ணிக்கை, உலகில் உள்ள மற்ற அனைத்து தொழில்துறை ரோபோக்களின் மொத்த எண்ணிக்கையையும் விட அதிகமாகும்.
இது, பிற தொழில்துறை நாடுகளை விடவும், சீனா தனது உற்பத்தியை எத்தகைய வேகத்தில் கூட்டியுள்ளது என்பதை காட்டுகிறது.
விவசாயம், வீட்டு வேலை, ஹோட்டலில் உணவு பரிமாறுவது என ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டு வரும் சூழலில், மனிதர்களை போல் துணியை தைக்கவும் தொடங்கியுள்ளது.
















