இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவின் பிறந்த நாளையொட்டி குடியரசு துணை தலைவர் மற்றும் பாஜக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாகக் குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், விடுதலைப் போராட்ட வீரராகவும், தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடிய போராளியாகவும் திகழ்பவர் நல்லக்கண்ணு எனவும், அவருக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்து என்றும் பதிவிட்டுள்ளார்.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ஞானம், நேர்மை, மனிதநேயம் ஆகிய மூன்றின் அடையாளமாகத் திகழ்பவர் நல்லக்கண்ணு எனவும், அவருக்கு 101வது பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவிப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.
பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வெளியிட்ட வாழ்த்து பதிவில், நேர்மையான அரசியலும், எளிமையான வாழ்வும் வாழ்பவர் நல்லக்கண்ணு எனவும் சமூக சீர்திருத்தவாதியான அவர் நீண்ட ஆயுளுடன் வாழ இறைவனை பிரார்த்திப்பதாகவும் பதிவிட்டுள்ளார்
















