வேறு இயக்கமாக இருந்தால் தேடி தேடி சென்று வாக்குகள் சேகரிக்க வேண்டிய நிலை இருக்கும் என்றும், தவெகவுக்கு வாக்களிக்க மக்கள் தயாராக உள்ளதாகவும் அக்கட்சியின் தலைமை நிர்வாகக்குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் கரட்டூர் பகுதியில் உள்ள அலுவலகத்தில் தவெக தலைமை நிர்வாகக்குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தலைமையில் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றுது.
இந்தக் கூட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்களின் பட்டியல்களை அந்தந்த பகுதி பொறுப்பாளர்களிடம் வழங்கினார்.
பின்னர் பேசிய அவர், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவை தொடர்ந்து தவெக தலைவர் விஜய் உடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளதாகக் கூறினார்.
வேறு இயக்கமாக இருந்தால் தேடி தேடி சென்று வாக்குகள் சேகரிக்க வேண்டிய நிலை இருக்கும் எனக்கூறிய அவர், தேர்தல் தேதி மற்றும் சின்னத்தைச் சொன்னால் மக்கள் வாக்களிக்கத் தயாராக உள்ளதாகத் தெரிவித்தார்.
















