ஈரோடு மாவட்டம் நசியனூர் அருகே நாதக நிர்வாகிக்குச் சொந்தமான பேக்கரி கடை அடித்து உடைக்கப்பட்ட சம்பவத்தில் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
நசியனூரை சேர்ந்த நித்தியகுமார் என்பவர் தேசிய நெடுஞ்சாலையில் சொந்தமாகப் பேக்கரி கடை நடத்தி வருகிறார்.
இவரது கடைக்கு வந்த திமுக கவுன்சிலர் கோவேந்திரன் என்பவர் அடியாட்களை வைத்துக் கடையை அடித்து நொறுக்கியதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார் 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்ததோடு, முன்விரோதம் காரணமாகத் தாக்குதல் சம்பவம் நடைபெற்றதாகத் தகவல் தெரிவித்துள்ளார்.
















