பீகார் மாநிலத்தில் ஒரே மாதத்தில் இரண்டு போலி சிகரெட் தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, முங்கர் என்ற இடத்தில் கடந்த 2 வாரங்களுக்கு முன் ஒரு போலி தொழிற்சாலை கண்டுபிடிக்கப். தற்போது அதே பகுதியில் இரண்டாவது போலி சிகரெட் ஆலை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
முங்கரின் வாசுதேவ்பூர் காவல் எல்லைக்குட்பட்ட நயாகாவ் பகுதியில் இந்தத் தொழிற்சாலை இயங்கி வந்தது.
மேலும், இந்தப் போலித் தொழிற்சாலையில் இருந்து 85 ஆயிரம் ரூபாய் ரொக்கம், நான்கு நாட்டுத் துப்பாக்கிகள், சிகரெட் தயாரிப்பதற்கான இயந்திரங்கள் மற்றும் பிரபல நிறுவனங்களின் பெயரிலான போலி பேக்கிங் அட்டைகள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சட்டவிரோதத் தொழில் தொடர்பாக முகமது தௌபிக், முகமது அக்பர் மற்றும் முகமது முகிர் ஆகிய மூன்று பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
















